இளையதளபதியின் அடுத்த படத்திற்கான அறிவிப்பு :: தலைப்பு “ஜில்லா”

Posted by By at 12 January, at 20 : 23 PM Print

இளையதளபதியின் அடுத்த படத்திற்கான அறிவிப்பும் வந்துவிட்டது. இதில் விஜய், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், காஜல் அகர்வால் இணையும் படத்தை ஆர்.பி.சௌத்ரி இயக்குகிறார். படத்தின் தலைப்பு “ஜில்லா” . இப்படத்தை இயக்குபவர் ஜெயம் ராஜாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் நேசன், படத்திற்கு இசை இமான். படப்பிடிப்பு மே மாதத்தில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

துப்பாக்கி படத்திலும் மலையாள ஸ்டார் ஜெயராம் நடித்ததில் படம் வெற்றியடைந்ததை அடுத்து இந்த கூட்டணி அமைந்ததா, பொறுத்திருந்து பார்ப்போம்.

ஆர்.பி.சௌத்ரி ஒரு மிகப்பெரிய தயாரிப்பாளர், பல புது முக நடிக நடிகயரையும் புதுமுக இயக்குனர்களையும் தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியவர். இவர் எடுத்த பல திரப்படங்கள பாக்ஸ் ஆபிசில் ஹிட் அடித்திருக்கின்றன. அந்த வகையில் “ஜில்லா”வும் சேருமா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Hot News, சூடானசெய்திகள்

Related Posts

Post Your Comment

You must be logged in to post a comment.