கார்த்தியின் சந்தோஷ ‘டபுள் ரிலீஸ்!’

Posted by By at 12 January, at 20 : 13 PM Print

நடிகர் கார்த்தி உற்சாகத்தின் உச்சத்தில் இருக்கிறார். அது இந்த பொங்கலுக்கு ரிலீசாகியிருக்கும் அவரது அலெக்ஸ் பாண்டியன் படத்துக்காக மட்டுமல்ல… அதே நாளில் அழகு மகள் பிறந்ததால்! கடந்த ஆண்டு கார்த்திக்கும் ஈரோட்டை சேர்ந்த ரஞ்சனிக்கும் கோவையில் விமரிசையாக திருமணம் நடந்தது.

 

ரஞ்சனி கருவுற்றார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவர் பிரசவத்துக்காக, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நேற்று மாலை 3 மணிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும், குழந்தையும் நலமாக இருக்கிறார்கள்.

 

குழந்தை பிறந்த தகவல் அறிந்ததும், நடிகர் கார்த்தி மருத்துவமனைக்கு வந்து மனைவியையும், குழந்தையையும் பார்த்தார். ஊழியர்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடினார்.

 

Hot News, சூடானசெய்திகள்

Related Posts

Post Your Comment

You must be logged in to post a comment.